காவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம்
This is the news about a indigenous Alambadi Cattle which lives in Cauvery river bank in the verge of extinction due to fodder shortage..... காவிரி கரையோர கிராமங்களில் தீவன தட்டுப்பாடு : ஆலம்பாடி இன மாடுகள் அழிந்து போகும் அபாயம் 2018-02-12@ 10:53:14 மேட்டூர்: காவிரி வறண்டு வருவதால், கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், ஆலம்பாடி இன மாடுகள் முற்றிலும் அழிந்து போகும் நிலை உருவாகியுள்ளது. தமிழகத்திற்கு உரிய நீரை கர்நாடகம் வழங்காததாலும், போதிய மழை பெய்யாததாலும் கடந்த ஆண்டு, காவிரி வறண்டு போனது. இதனால் பண்ணவாடி, கோட்டையூர், செட்டிப்பட்டி பரிசல் துறைகளில் காவிரியை மோட்டார் படகிலும், பரிசலிலும் கடந்து சென்ற நிலை மாறி இருசக்கர வாகனங்களிலும், டெம்போக்களிலும் மக்கள் கடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. பரந்து விரிந்த காவிரி வறண்ட நிலையில் நடந்து சென்றும் கடந்தனர். மேட்டூர் அணை வரலாற்றில், காவிரியை வாகனத்தில் கடந்து சென்ற நிலை கடந்த ஆண்டு தான் ஏற்பட்டது. குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டதோடு, கால்நடைகளுக்கு தண்ணீர் மற்றும் தீவன தட்டுப்பாடு ஏற்பட்டு ...